என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாற்று வழிகளை ஆராயும் இந்தியா
நீங்கள் தேடியது "மாற்று வழிகளை ஆராயும் இந்தியா"
ஈரானுக்கு மாற்றாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. #alternativeoilsupplies #Indiaseconomy #AliceWells
வாஷிங்டன்:
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
குறிப்பாக, ஈரான் மீது முழுமையான தடை விதிக்கப்படும் நவம்பர் 4-ம் தேதி முதல் அந்நாட்டுடன் இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய கூடாது. மீறினால், ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைக்கும் எந்த நாடாக இருந்தாலும் அந்நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவின் இந்த நிபந்தனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இறுதி முடிவைத்தவிர வேறு எந்த நாட்டின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட முடியாது என்பது இந்தியா கடைபிடித்துவரும் வெளியுறவுத்துறை கொள்கையாக உள்ளது.
முன்னர் இருந்த அளவை விட ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் அளவை இந்தியா ஓரளவுக்கு குறைத்து கொண்டுள்ளது. ஆனால், உள்நாட்டு நுகர்வுத் தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இந்நிலையில், ஈரானுக்கு மாற்றாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் தெற்காசியா மற்றும் மத்திய ஆசியா பிராந்தியத்துக்கான முதன்மை துணை உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் வாஷிங்டன் நகரில் இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ஈரான் மீதான முழுமையான தடைக்கு பின்னர் உண்டாகும் பின்விளைவுகள் தொடர்பாக விவாதிப்பதற்காக நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் முக்கிய இடத்தில் உள்ள நமது நட்பு நாடான இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஈரானுக்கு மாற்றாக வேறு என்ன செய்யலாம்? என்பது இந்த ஆலோசனையின் மைய அம்சமாகும்’ என தெரிவித்துள்ளார். #alternativeoilsupplies #Indiaseconomy #AliceWells
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளை அமெரிக்கா நிர்பந்தித்துள்ள நிலையில், இந்தியா மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியிருக்கிறது. #IranOilimports
புதுடெல்லி:
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்த நாட்டை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக, நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது, இதை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என நிர்பந்தம் செய்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன், பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்பந்தத்திற்கு பணிந்து மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வரைவுத் திட்டத்தை தயாரிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சவுதி மற்றும் குவைத்திலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம், டாலருக்குப் பதிலாக ரூபாயில் பணத்தை ஏற்றுக்கொள்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை ஈரான் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ஈரானிடம் இருந்து நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேச நலனை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்யும் என்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்தியா பல்வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அமெரிக்கா ஏற்றுமதி செய்தாலும் இந்திய கம்பெனிகள் முதல் ஆளாக வந்து வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். #IranOilimports #Indiaoilimports

ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடான இந்தியாவுக்கு, அமெரிக்காவின் இந்த நிர்பந்தம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்பந்தத்திற்கு பணிந்து மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வரைவுத் திட்டத்தை தயாரிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சவுதி மற்றும் குவைத்திலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம், டாலருக்குப் பதிலாக ரூபாயில் பணத்தை ஏற்றுக்கொள்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை ஈரான் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ஈரானிடம் இருந்து நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேச நலனை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்யும் என்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்தியா பல்வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அமெரிக்கா ஏற்றுமதி செய்தாலும் இந்திய கம்பெனிகள் முதல் ஆளாக வந்து வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். #IranOilimports #Indiaoilimports
×

X